Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது புதிய போத்தலில் பழைய வைன் : லக்பிம சாடல்

நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பது புதிய போத்தலில் பழைய வைன் : லக்பிம சாடல்

Written By Eve on Tuesday, July 12, 2011 | 11:28 PM

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வுக்காக அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு புதிய போத்தலில் பழைய வைன் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக லக்பிம செய்திதாள் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் மங்கள முனசிங்க குழு, அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முதல் பதவிக் காலத்தில் சாவகட்சிக்குழு என்பன நாடாளுமன்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய வகையிலேயே அமைந்திருந்தன.

எனினும் அவற்றின் வரைபுகள் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில் புதிதாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து சாதிக்க போவது எதுவும் இல்லை. இது காலத்தை கடத்தும் ஒரு வேலைத்திட்டமே என்று எதிர்க்கட்சிகள் கூறுவதாக லக்பிம தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மறுபுறத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுகிறது.

எனவே இது முரண்பாடுகள் நிறைந்த செயற்பாடு என லக்பிம குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அழுத்தம் காரணமாக இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்க்கட்சிகளிடம் திணிக்கும் செயற்பாடாகவே தாம் இதனை பார்ப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளமையையும் லக்பிம சுட்டிக்காடடியுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger