காவல்துறைத் திணைக்களத்தின் உயர் பதவிகளை வகிப்போர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையில் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
காவல்துறை திணைக்களத்தின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சிலர் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர்களை தண்டிக்கும் நோக்கில் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளினால் மூடிமறைக்கப்பட்டிருந்த விசாரணைகள் தற்போது மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காவல்துறையின் விசேட விசாரணைப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆகியன இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment