Headlines News :

Meenakam News World

Home » , , , , , , , » பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 115,000 ரூபா சம்பளம் வழங்க அரசாங்கம் இணக்கம்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 115,000 ரூபா சம்பளம் வழங்க அரசாங்கம் இணக்கம்

Written By Eve on Wednesday, July 13, 2011 | 10:24 PM

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 115,000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும், இதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கங்கள் பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை.

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

எனினும், இதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கங்கள் பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் தொடர்ச்சியாக தொழிற்சங்கப் போரட்டத்தை முன்னெடுப்பது என தீர்ர்மானிக்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்கு மட்டுமே இந்த சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வுகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் நிர்மால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வு தவிர்ந்த ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்தப் பிரச்சினை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger