Headlines News :

Meenakam News World

Home » , , , , , » இடையூறுகளுக்கு அஞ்சி தாம் பின்வாங்கப் போவதில்லை – மேர்வின் சில்வா

இடையூறுகளுக்கு அஞ்சி தாம் பின்வாங்கப் போவதில்லை – மேர்வின் சில்வா

Written By Eve on Wednesday, July 13, 2011 | 10:25 PM

ஏதேனும் பணியொன்றை செய்யும் போது அதற்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் அன்று போல் இன்றும் இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறான இடையூறுகளுக்கு அஞ்சி தாம் பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயரிய ஜனநாயக வழிமுறைகளை தாம் பின்பற்றுவதில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், மனிதர்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பான தெளிவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிரிபத்கொடையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

துரோகிகளின் நடவடிக்கையினால் மேற்கத்தைய நாடுகள் இலங்கையை ஆக்கிரமித்ததாகவும், அதே நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger