Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » யாழ்.தேர்தல் நிலைமை குறித்து அமெரிக்கத் தூதரக அதிகாரி ஆராய்வு

யாழ்.தேர்தல் நிலைமை குறித்து அமெரிக்கத் தூதரக அதிகாரி ஆராய்வு

Written By Eve on Wednesday, July 13, 2011 | 10:23 PM

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவ லர் ஜோன் எம்.டிஸ்ரார் நேற்று நேரில் வந்து ஆராய்ந்தார்.

யாழ்.மாவட்டத்துக்கு நேற்று வந்த அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்.செயலகத்துக்கு நேற்றுக் காலை விஜயம் செய்த அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் எந்தளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன? வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதா? எத்தனை பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்? என்பது தொடர்பான விவரங்களைக் குழுவினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் அதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அரச அதிபரிடம் கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger