-
பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் பார்வதி அம்மையாரின் உடல் தகனம்
Posted: Tue, 22 Feb 2011 12:59:29 +0000
தமிழ்தேசியத்தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மையாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன. வல்வட்டித்துறை இந்து மயானத்தில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. மேலும்>>
-
யாழ் பல்கலைக் கழகத்தில் பொலிஸ் குவிப்பு
Posted: Tue, 22 Feb 2011 10:01:18 +0000
பார்வதி அம்மாவின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள செல்லவிருந்த மாணவர்கள் துரத்தப்பட்டனர். அவர்கள் செல்லவிருந்த பஸ் வண்டியும் திருப்பி அனுப்பபட்டது பல்கலை வாசல் எங்கிலும் பொலிஸ் மயம். மாணவர்கள் கொந்தளித்தபடி உள்ளனர். பல்கலையில் பயச் சூழல் காணப்படுகிறது.மேலும்>>
-
வீரத்தாய் பார்வதி அம்மையாருக்கு மலேசியாவில் இரங்கல் நிகழ்வு
Posted: Tue, 22 Feb 2011 09:11:29 +0000
தமிழீழ தேசியத் தலைவனைப் பெற்றெடுத்த வீரத்தாய் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் இறுதி வணக்க நிகழ்வு நேற்று (21-02-2011) மலேசியா பினாங்கு மாநிலத்தில் நடைபெற்றது. தமிழர்களின் தலைவனாய், தமிழீழத் தேசியத் தலைவனாய் தமிழர்கட்கு வழிகாட்டியான எமது அற்புத தலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களை பெற்றெடுத்த பெருந்தகை அன்னை பார்வதி அம்மாளுக்கு மேலும்>>
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி
Posted: Tue, 22 Feb 2011 08:02:01 +0000
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் என்றழைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் சுவரொட்டிகள் இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளனமேலும்>>
-
வீரத்தாய்க்கு விழுப்புரத்தில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு
Posted: Tue, 22 Feb 2011 07:43:48 +0000
விழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் வீரத்தாய் பார்வதி அம்மாளுக்கு வீரவணக்க நிகழ்வு நடை பெற்றது. நிகழ்வுக்கு தமிழிளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த எழில்.இளங்கோ தலைமையில்மேலும்>>
-
வீரத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
Posted: Tue, 22 Feb 2011 06:25:27 +0000
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த வீரத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்கள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினார். மேலும்>>
-
சிங்களப் பேய்களுக்கு பிரபாகரன் பேர்சொல்ல என்ன தகுதி இருக்கிறது ? ஒரு தாய் !
Posted: Tue, 22 Feb 2011 04:56:53 +0000
வல்வையில் வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாளின் உடலத்துக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது ஒரு பெரும் குறையாக உள்ளது. பலர் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு அஞ்சியும், அவர்கள் விடுக்கும் அச்சுறுத்தலுக்கு அஞ்சியும் செல்லாது உள்ளனர். அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் பலரும் அஞ்சலிக்குச் செல்லாது அதனைத் தவிர்த்தும் வருகின்றனர்.மேலும்>>
-
நரகத்தில் இருந்து மேட்சத்திற்கு வந்துவிட்டேன்… – அருள் தெய்வேந்திரன்
Posted: Tue, 22 Feb 2011 03:12:31 +0000
மனித வாழ்வில் இரக்கமில்லாதவர்கள் மனிதர்களா! நோயால் அவதியுறும் போது இரங்காதவர்கள் தலைவர்களா! பாசம், அன்பு, கருணையற்றவர்கள் அறிஞர்களா! புலிக்குட்டி சாகப்போகிறது டாக்டர்கள் வெளிநாட்டில் இருந்து அழைக்க உத்தரவு போடுகிறார்கள்! யானை இறந்துவிட்டது அதைக் கொண்டவர்கள் என நால்வரை விசாரணை என கைது செய்கிறார்கள்! மேலும்>>
-
இன்று தாயகத்தில் தேசத்தின் பேரன்னைக்கு இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் அதே வேளை பிரித்தானியாவிலும் நடைபெறுகிறது.
Posted: Tue, 22 Feb 2011 01:36:00 +0000
தேசியத் தலைவனைப் பெற்றெடுத்த "தேசத்தின் பேரன்னை" பார்வதி அம்மாளுக்கு விடைகொடுக்கும் இறுதி வணக்கநிகழ்வு இன்று (22-02-2011) பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. பிரித்தானியத் தலைநகர் லண்டனின் New Broadway, Ealing, W5 2BY எனும் பகுதியில் உள்ள "EALING TOWN HALL" Prince மண்டபத்தில் மிகப் பெரிய அளவில் "தேசத்தின் பேரன்னை" க்கு இறுதிவணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. மேலும்>>
-
கரூரில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய தேசத்தாயின் நினைவேந்தல் நிகழ்வு
Posted: Tue, 22 Feb 2011 01:05:56 +0000
மதிமுக பொது செயலாளர் வை.கோ, ஈழத்தின் பேரன்னை பார்வதி அம்மையாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் அமைதிப் பேரணிகளும், இரங்கல் பொதுக்கூட்டங்களும் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மேலும்>>
No comments:
Post a Comment