Headlines News :

Meenakam News World

Home » » தமிழ் தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மா மரணம்

தமிழ் தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மா மரணம்

Written By Eve on Saturday, February 19, 2011 | 7:14 PM

  • தமிழ் தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மா மரணம்

    Posted: Sun, 20 Feb 2011 03:03:14 +0000
    தமிழ்த் தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம். ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த மேலும்>>
  • "விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன்

    Posted: Sat, 19 Feb 2011 18:35:36 +0000
    சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி 20-02-2009  அன்று  வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதம் . "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் 20-02-2009  அன்று  வெள்ளிக்கிழமை [...]
  • வான் புலிகளின் கரும்புலிகளின் நினைவுகளை தங்கிய காணொளிகள்

    Posted: Sat, 19 Feb 2011 18:33:18 +0000
    சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.
  • வான்புலி வெந்தபோது வானமே சிவந்த்தடா -சங்கிலியன்

    Posted: Sat, 19 Feb 2011 18:31:45 +0000
    வானேறி வந்த  வல்லைமைந்தன் பிள்ளைகள் வானிலே கருகியது கொடுமை  சிங்களத்தின் சிறகொடிக்கப்பறந்த எம் வேங்கைகள் நடுவானில்  நாசமாய்ப்போனதுவோ -சர்வேசா அக்கினிக்குஞ்சுகள் அடிபட்டு வீழ்ந்ததுவோ கொடுமை கொடுமையிலும் கொடுமை திரிபுரம் எரித்தசிவனின் பிள்ளைகள் செந்தணலில் குளித்து ஈழத்தமிழினத்தை கண்ணீரில் குளிக்க வைத்ததுவே  -மறக்குமா எம் நெஞ்சம் மன்னிக்குமா என் தமிழினம் நெருப்பு சுடும் என்று எவனடா சொன்னது எவன் சொன்னது அதைப்பொய்யாக்கிப்போனதுவே எம் புலிப்படை சூரியமண்டலமே வெப்பத்தில் தவிக்க பரந்தவானில் பறந்த எம் வான்புலிகள் நெருப்பினை கக்கியதே காலனையும் [...]
  • எகிப்திய மக்கள் அராஜகத்தை அகற்றிய நிகழ்வு ஈழத்தமிழர்களை உத்வேகமடையவைத்துள்ளது: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

    Posted: Sat, 19 Feb 2011 16:43:33 +0000
    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் எகிப்திய மக்களுக்கு தெரிவிக்கின்றது. எகிப்திய மக்கள் அராஜகத்தை தமது நாட்டிலிருந்து அகற்றி இந்த வரலாற்று நிகழ்வை அடைந்திருப்பதைக்கண்டும், அவர்கள் தமக்கெதிரான பிரமாண்டமான தடைகளை மேற்கொண்ட விதத்தை பார்த்தும், உலகம் முழுவதுமுள்ள ஈழத்தமிழர்கள் உத்வேகமடைந்திருக்கிறார்கள். எகிப்திய மக்களின் சாதனை உலகெங்கும் எதிரொலித்த வண்ணம் உள்ளது. இவர்களின் வெற்றி உலகெங்கும் உள்ள ஏனைய ஊழல் மிகுந்த அரச தலைவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகிறது. மக்களின் மீது திணிக்கப்பட்ட துயரத்தையும், [...]
  • முத்துக்குமாரைக் கொத்திப் போட்டது யார்?

    Posted: Sat, 19 Feb 2011 11:02:52 +0000
    சந்தனக் கடத்தல் வீரப்பனின் செல்லப்பிள்ளையாக இருந்த புதுக்கோட்டை முத்துக்குமார் 'நாம் தமிழர்' இயக்கத்தில் சேர்ந்து அந்தக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆனார். சீமானின் தளபதியாக வலம்வந்த சுப.முத்துக்குமாரை கடந்த 15-ம் தேதி இரவு, பயங்கரமாக வெட்டிக் கூறுபோட்டுக் கொலை செய்துவிட்டது ஒரு கும்பல். தமிழகத்தைக் குலை நடுங்கவைத்த இந்த சம்பவத்தின் நாயகனான சுப.முத்துக்குமார் யார்? இந்தக் கேள்விக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்! மதுரை பசும்பொன் நகர் ஜீவா தெருவில் சுந்தரம், பார்வதி தம்பதியின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் [...]
  • முத்துக்குமாரைக்கொன்றது இலங்கைக்கும்பல்…?

    Posted: Sat, 19 Feb 2011 09:43:26 +0000
    புதுக்கோட்டையில் 'நாம் தமிழர்' இயக்க ஒருங்கிணைப்பாளர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசின் ஒத்துழைப்போடு  இலங்கையைச்சேர்ந்தவர்கள் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் எனவும், தேர்தலுக்கு முன் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேசும் இன்னும் பலர் இதேபோல் கொல் லப்படலாம் என்றும் எழுந்துள்ள பேச்சு பீதியைக் கிளப்பியுள்ளது. மதுரை மாவட்டம் பசும்பொன்நகர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், 'நாம் தமிழர்' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ஈழ விடுதலை தொடர்பான பணிகளில்  ஆர்வமாக செயல்பட்டவர். இலங்கையில் போர் நடந்து [...]
  • வதை முகாம்களில் 5000 முன்னாள் போராளிகள்: ஐ.நா

    Posted: Sat, 19 Feb 2011 07:46:38 +0000
    சிறீலங்காவில் போர் முடிவுற்று 21 மாதங்களாகிய பின்னரும் முன்னாள் போராளிகள் என சந்தேகிக்கப்படும் சுமார் 5,000 பேர் முகாம்களில் உள்ளதாக ஐ.நாவின் முதன்மை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேற்படி போராளிகள் ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அணுகப்பட முடியாத வகையில் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஐ.நா.வின் சிறீலங்காவுக்கான வதிவிடப் பிரநிதி நீல் புஹ்னே கூறியுள்ளர். அதேவேளை கண்ணிவெடிகள் காரணமாக மேலும் 18000 தமிழர்கள் நலன்புரி முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் புஹ்னே தெரிவித்துள்ளார்.
  • விசுவமடுவில் பாலியல் தொல்லைகளில் ஈடுபடும் சிறீலங்காப்படை கப்டன் வசந்த குழுவினர்

    Posted: Sat, 19 Feb 2011 06:57:28 +0000
    முல்லைத்தீவு விசுவமடுப்பகுதியில் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களின்சொத்துக்களை அபகரிக்கும் செயற்பாடுகளை  சிறீலங்காப்படையினன் கப்டன் வசந்த எனும் படைப்பொறுப்பதிகாரி ஈடுபட்டுள்ளதாக  மக்கள் தெரிவித்துள்ளார்கள். இடம்பெயர்ந்த மக்களின் சொத்துக்களை சிங்களவர்களை சூறையாடுவதற்கும் உறுதுணையாக நின்று செயற்படுபதாகவும் இவர் விசுவமடுவின் றெட்பான பாரதி  வித்தியாலய பகுதியில் முகாம் அமைத்து செயற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். இடம்பெயர்ந்த மக்களை விசுவமடுவிற்கு அங்கால் புதுக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேற அனுமதிக்காத நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் சொத்துக்களை கையகப்படுத்தி சிங்களவர்களுக்கு விற்பனை செய்யும் அதே வேளை விசுமடுபகுதியில் மீள்குடியேறியுள்ள [...]


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger