Home »
ஐந்து
,
தடுத்து
,
துஷ்பிரயோகம்
,
பாதிக்கப்பட்ட
,
பாலியல்
,
மனநிலை
,
யுவதியை
,
வைத்து
» மனநிலை பாதிக்கப்பட்ட யுவதியை ஐந்து நாள் தடுத்து வைத்து 11 பேர் பாலியல் துஷ்பிரயோகம்
மனநிலை பாதிக்கப்பட்ட யுவதியை ஐந்து நாள் தடுத்து வைத்து 11 பேர் பாலியல் துஷ்பிரயோகம்
Written By Eve on Thursday, October 6, 2011 | 6:03 AM
மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவரைப் பாழடைந்த வீடொன்றுக்குள் அழைத்துச் சென்று அங்கு ஐந்து தினங்கள் அவரைத் தடுத்து வைத்து பதினொரு பேர் பாலியல் வல்லுறவு புரிந்த மனித நாகரிகத்துக்கும் மனித நேயத்துக்கும் அப்பாற்பட்ட கேவலமான சம்பவம் ஒன்று இலங்கையின் சிங்களப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் கெக்கிராவ, கல்கிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதற்காக தம்புள்ள பிரதான பஸ் தரிப்பில் குறிப்பிட்ட பெண் நின்றிருந்த போது அங்கு வந்த இளம் வர்த்தகர் ஒருவர் அவரை அழைத்துச் சென்று பாழடைந்த வீட்டில் தடுத்து வைத்ததுடன் குறிப்பிட்ட வர்த்தகருடன் 11 பேர் அந்த யுவதி மீது பாலியல் வல்லுறவு புரிந்துள்ளனர். அதன் பின்னர் அந்தப் பெண்ணை மீண்டும் தம்புள்ள பஸ் நிலையத்துக்குக் கொண்டு வந்து ஆட்டோ சாரதி ஒருவரிடம் ஒப்படைத்துள்ளனர்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தம்புள்ள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். தற்போது இந்த யுவதி மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Labels:
ஐந்து,
தடுத்து,
துஷ்பிரயோகம்,
பாதிக்கப்பட்ட,
பாலியல்,
மனநிலை,
யுவதியை,
வைத்து
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
stole from http://www.tamilthai.com/?p=27907&utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25a9%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%25af%25e0%25af%2581%25e0%25ae%25b5
stop stealing from other sources
Post a Comment