Headlines News :

Meenakam News World

Home » , , , , , » இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு பிரித்தானிய நீதிமன்றம் இடைக்காலத் தடை (Video in)

இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு பிரித்தானிய நீதிமன்றம் இடைக்காலத் தடை (Video in)

Written By Eve on Wednesday, September 28, 2011 | 11:17 PM

இலங்கை அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் 50 இலங்கை அகதிகள் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருந்தனர்.  எனினும், இறுதி நேரத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அகதிகளில் சிலர் துஸ்பிரயோகம் செய்யப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகதிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கையை ஒத்தி வைக்குமாறு பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அகதிகள் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைவார்கள் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், நீதிமன்ற தீர்ப்பு காரணமாக இந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா அல்லது நிரந்தரமாக அவர்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger