Home »
உண்ணாவிரதம்;
,
குடாநாட்டில்
,
சனியன்று
,
சீராக்குமாறு
,
நிலைமைகளை
,
வலியுறுத்தி
» சனியன்று உண்ணாவிரதம்; குடாநாட்டில் நிலைமைகளை உடன் சீராக்குமாறு வலியுறுத்தி
சனியன்று உண்ணாவிரதம்; குடாநாட்டில் நிலைமைகளை உடன் சீராக்குமாறு வலியுறுத்தி
Written By Eve on Monday, September 5, 2011 | 3:17 AM
கிறீஸ் பூதம் என்ற போர்வையில் யாழ். குடாநாட்டில் தற்போது கிளப்பப்பட்டிருக்கும் பீதியைக் கட்டுப்படுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேற்று முடிவு செய்யப்பட்டது.யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணிஅலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் கடந்த இரண்டு வார காலமாக நிலவிவரும் பதற்றம் பற்றி விரிவாக ஆராயப்பட்டுக் கருத்துகள் பரிமாறப்பட்டன.இக்கூட்டத்தில் நல்லை ஆதீன முதல்வர், தென்னிந்திய திருச்சபைப் பேராயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் மற்றும் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன், யாழ். மாவட்ட உள்ளூராட்சிச் சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் முக்கிய மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன.வடக்கில் குறிப்பாகக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மலையகத்தின் சில இடங்களிலும் புத்தளத்திலும் ஏற்பட்டுள்ள நிலைமை தொர்பில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து மர்ம மனிதர்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பது. இதற்காக சந்திப்பில் யாழ்ப்பாண சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான குழு ஒன்றை அனுப்புவது.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்குகிழக்கின் குறிப்பாக யாழ். குடாநாட்டின் இன்றைய நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பது.குடாநாட்டின் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்ப, துயரங்களை அரசுக்கும் வெளி உலகுக்கும் எடுத்துரைக்கும் நோக்குடன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை யாழ். குடாநாட்டில் உள்ள ஓர் ஆலய முன்றலில் எதிர்வரும் சனிக்கிழமை நடத்துவது.ஆகிய தீர்மானங்களே எடுக்கப்பட்டன.
Labels:
உண்ணாவிரதம்;,
குடாநாட்டில்,
சனியன்று,
சீராக்குமாறு,
நிலைமைகளை,
வலியுறுத்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment