Home »
செட்டிகுறிச்சிப்
,
பகுதியில்
,
பண்டத்தரிப்பு
,
மனிதன்
» பண்டத்தரிப்பு, செட்டிகுறிச்சிப் பகுதியில் மர்ம மனிதன்
பண்டத்தரிப்பு, செட்டிகுறிச்சிப் பகுதியில் மர்ம மனிதன்
Written By Eve on Monday, September 5, 2011 | 10:36 PM
நேற்று அதிகாலை வீட்டினுள் நுழைந்த மர்ம மனிதன் தாக்கியதில் ஐந்து பிள்ளைகளின் தாய் முகத்தில் காயமடைந்தார்.பண்டத்தரிப்பு, செட்டிகுறிச்சிப் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மர்மமனிதன் நடமாட்டம் இருந்ததாக மக்கள் கூறினர்.இதனால் அந்தப் பகுதியில் உள்ள நான்கைந்து குடும்பங்கள் இணைந்து ஒரே வீட்டில் இரவைக் கழித்து வருகின்றார்கள் என்றார் பெண் ஒருவர்.இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டினுள் நுழைந்த மர்ம மனிதன் படுத்திருந்த பெண் ஒருவர் மீது கல்விட்டு எறிந்துள்ளார். என்ன, ஏது? என்று பெண் கதவைத் திறந்து எட்டிப் பார்க்க முற்பட்ட வேளையில் மர்மமனிதன் அவரது தலையில் அடித்ததுடன் வாயைப் பொத்திக் கழுத்தையும் நெரித்துள்ளார். அவரது கன்னத்தில் நகக் கீறல் கள் ஏற்பட்டுள்ளன.இதனால் திக்குமுக்காடிய பெண் எழுப்பிய கூக்குரலைக் கேட்டு ஏனையவர்கள் எழுந்த தைத் தொடர்ந்து மர்மமனிதன் முன்னால் உள்ள தகர வேலியைப் பாய்ந்து தப்பிச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment