Headlines News :

Meenakam News World

Home » , , , » அநுராதபுரத்தில் முஸ்லிம் ஸியாரம் தரைமட்டம்

அநுராதபுரத்தில் முஸ்லிம் ஸியாரம் தரைமட்டம்

Written By Eve on Saturday, September 10, 2011 | 7:36 AM

அநுராதபுரம், குருணாகல் சந்தியில் அமைந்திருந்த (ஒட்டுப் பள்ளம்) மிகப் பழமைவாய்ந்த முஸ்லிம் ஸியாரம் ஒன்றினை திடீரென அங்கு வந்த ஒரு குழுவினர் முற்றாகத் தரைமட்டமாக்கிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து அநுராதபுரம் பெரிய பள்ளிவாசல் தர்மகர்த்தாவான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். பெளஸி எமக்குத் தகவல் தருகையில்,இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென ஸியாரம் அமைந்துள்ள இடத்துக்குள் பிரவேசித்த சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் ஸியாரத்தை முற்றாகத் தரை மட்டமாக்கிச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஸியாரத்தை அகற்றும்படி மாற்று இன மதக் குழுவொன்றினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பல நூற்றாண்டுகள் பழமைமிக்க ஸியாரத்தை அகற்ற முடியாது என அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனார்.

இந்த நிலையில், இன்று காலையில் எமக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி ஸியாரம் தாக்கப்படவுள்ளதாக அறிய முடிந்தது. இதனையடுத்து அங்கு பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் சுமார் 4.30 மணியளவில் திடீரென வந்த ஒரு குழுவினர் ஸியாரத்தை  முற்றாக நிர்மூலமாக்கிச் சென்றனர். தற்போது அங்கு சுற்றுச் சுவர் மட்டுமே எஞ்சியுள்ளது.இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்களுடன் தொடர்பு கொள்ள முயன்ற போதும் முயற்சி தோல்வியடைந்து விட்டது என்றும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger