Headlines News :

Meenakam News World

Home » , , , , , » இலண்டனில் நிதிசேகரிப்பு கூட்டமாம்: மாவை, சிறிதரன் மீது விசாரணை?

இலண்டனில் நிதிசேகரிப்பு கூட்டமாம்: மாவை, சிறிதரன் மீது விசாரணை?

Written By Eve on Saturday, September 10, 2011 | 7:37 AM

இலண்டனுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினாகள் இருவர் மீது சிறிலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளும் என இன்று வெளியான திவய்ன என்ற இனவாத ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலண்டனில் தங்கியிருந்த போது, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மர்ம மனிதர்களை உலவிட்டுத் தமிழ்ப் பெண்களை அச்ச நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளியுள்ளது என்று தவறான பிரசாரங்களை மேற்கொண்டதுடன் நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர் எனவும் கூறியே இவர்கள் மீது விசாரணைகளை சிறிலங்கா அரசு ஆரம்பிக்கவுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பிலேயே பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger