நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரும் சட்டவாளருமாகிய வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழக்காடும் கேணல் ரமேஸ் படுகொலை வழக்கு சிறிலங்கா அரசுத் தலைவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் இந்த அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சிறிலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியின் சார்பில தொடுக்கப்பட்ட வழக்கிலேயே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நத அழைப்பாணையை அடுத்து சிறிலங்கா அரசுத் தலைவர் அவசரமாக நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மீளவும் இன்னுமொரு சந்தர்பத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்குள் காலடி வைப்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
கேணல் ரமேசின் படுகொலை மற்றும் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment