Headlines News :

Meenakam News World

Home » , , , , , » கண்கலங்க வைக்கும் காணொளி நாளை கனேடிய பாராளுமன்ற வளாகத்தில்

கண்கலங்க வைக்கும் காணொளி நாளை கனேடிய பாராளுமன்ற வளாகத்தில்

Written By Eve on Tuesday, September 27, 2011 | 4:07 AM

இலங்கையின் கொலைக் காணொளி நாளை கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் காண்பிக்கப்படவுள்ளதாகத் கனேடிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளது.மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினரால் (Human Rights Watch) அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்னும் காணொளியை கனேடியப் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் புதன்கிழமை, செப்ரெம்பர் 28ஆம் நாள் 2011 மாலை 6:00 மணிக்குத் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர்.

உங்கள் பிரதேசப் பாராளுமன்ற உறுப்பினரை உடனடியாக தொடர்பு கொண்டு இக்காணொளியைக் காண வலியுத்துமாறு கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது. இக்காணொளியானது பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஊடகங்களுக்கும் மட்டுமே காண்பிக்கப்படும். பொதுமக்கள் கலந்து கொள்ள முடியாது.

நன்றி

கனடியத் தமிழர் பேரவை

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger