Home »
அடாவடி:
,
தமிழர்கள்
,
நீதிமன்றிலா?
,
நெதர்லாந்தின்
,
போர்க்குற்ற
» நெதர்லாந்தின் அடாவடி: தமிழர்கள் போர்க்குற்ற நீதிமன்றிலா?
நெதர்லாந்தின் அடாவடி: தமிழர்கள் போர்க்குற்ற நீதிமன்றிலா?
Written By Eve on Thursday, September 15, 2011 | 1:08 AM
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் என்று கைது செய்யப்பட்ட ஐந்து தமிழர்களை ஹேக்கில் அமைந்துள்ள போர்க்குற்ற விசாரணை நீதிமன்றில் முன் நிறுத்தபப்டுவர் என தகவல்கள் கசிந்துள்ளன. விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து தமிழர்களுக்கும் எதிரான வழக்கு நடைபெறவுள்ளது.ஒப்ரேஷன் கொனிக் என்ற திட்டத்தின் கீழ் நெதர்லாந்து பொலிஸார் ஐந்து தமிழர்கர்களையும் கைது செய்தனர். இவை உள் நாட்டு சட்டதிட்டங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டிய நிலையில் குறித்த ஐவரும் நாளைய தினம் தெதர்லாந்து ஹேக் நகரில் உள்ள போரக்குற்ற விசாரணை நீதிமன்றத்தில் முன் நிறுத்தபப்டுவார்கள் என அறிய முடிகின்றது.இந்த ஐவருள் ஒருவரான ஆர்.ஸ்ரீரங்கம் என்பவரின் சட்டத்தரணி விக்டர் கோப், ஐரோப்பிய நீதிமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றிய தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment