Home »
அறிக்கை
,
உரிமைகள்
,
ஐக்கிய
,
கையளிக்கப்பட்டுள்ளது
,
சபையில்
,
நாடுகள்
,
நிபுணர்
» ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைகள் சபையில் கையளிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைகள் சபையில் கையளிக்கப்பட்டுள்ளது
Written By Eve on Wednesday, September 14, 2011 | 1:47 AM
இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை நடந்து கொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அதிகாரி ஒருவரை பொதுச் செயலாளர் பான் கீமூன் நியமித்துள்ளார்.ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா அகமட் ஓபெய்ட் என்ற அதிகாரியே இதற்கென நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. செயலகம் அறிவித்துள்ளது.பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையின் போரில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களில், ஐ.நா. இறுதிப் போரின் போது வலயத்தில் இருந்து வெளியேறியமையும் ஒரு காரணியாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.அத்துடன் போரின் போது ஐ.நா. நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்யப்படவேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்திருந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு முன்னகர்த்திய கையோடு இந்த நியமனத்தையும் பான் கீமூன் வழங்கி உள்ளார்.ஓபெய்ட் தனது பணிகளை விரைவில் ஆரம்பிப்பார் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment