Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » பாலியல் குற்றச்சாட்டு: 100 மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த சிப்பாய்கள் (Video in)

பாலியல் குற்றச்சாட்டு: 100 மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த சிப்பாய்கள் (Video in)

Written By Eve on Monday, September 5, 2011 | 10:38 PM

ஐ.நா அமைதிகாக்கும் படையில் கடமையாற்றிய இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2007  ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக ஐ. நா வட்டாரங்கள் தெரிவிகின்றன. ஆனால் இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கபப்ட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அந்த செய்திகள் கூறுகின்றன.

இதே வேளை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையினரால் இளவயது பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவருவதாகவும் இந்தப் படையில் கடமையாற்றும் உருகுவே நாட்டைச் சேர்ந்த வீரர்கள் நால்வர் ஹெய்ட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண்ணைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ காட்சியொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் காணொளி தொடர்பாக உரிய விளக்கங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருகின்றன.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger