Headlines News :

Meenakam News World

Home » , , , , , , , » ஊடக ஒடுக்குமுறையை உடனே தடுத்து நிறுத்து; கொழும்பில் நேற்று பெரும் ஆர்ப்பாட்டம் (Photo in)

ஊடக ஒடுக்குமுறையை உடனே தடுத்து நிறுத்து; கொழும்பில் நேற்று பெரும் ஆர்ப்பாட்டம் (Photo in)

Written By Eve on Tuesday, August 2, 2011 | 10:24 PM

 உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான, மனிதநேயமற்ற தாக்குதலைக் கண்டித்து, ஊடக ஒடுக்குமுறையை உடன் தடுத்து நிறுத்து என்ற கோஷத்துடன் தலைநகர் கொழும்பில் நேற்றுப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. லிப்டன் சதுக்கத்தில் முற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர் ஒன்றியம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.

தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.சிறீதரன், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஐக்கியத் தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மங்கள சமரவீர, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட, அனோமா பொன்சேகா, இடதுசாரிகள் முன்னணியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரட்ன உட்படப் பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர். ஒன்றரை மணி நேரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஊடக சுதந்திரத்தையும் மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

[Show as slideshow]colombo_02_08_2011_02 colombo_02_08_2011_03 colombo_02_08_2011_05 colombo_02_08_2011_1 colombo_02_08_2011_4 kug01 kug02 truthassaulted1 truthassaulted10 truthassaulted2 truthassaulted3 truthassaulted4 truthassaulted5 truthassaulted7 truthassaulted8 truthassaulted9

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger