Headlines News :

Meenakam News World

Home » , , , , , , , » பிரபாகரனின் வீட்டை அடியோடு அகற்றியோர் வல்வை மண்ணை என்ன செய்யப் போகின்றனர்;

பிரபாகரனின் வீட்டை அடியோடு அகற்றியோர் வல்வை மண்ணை என்ன செய்யப் போகின்றனர்;

Written By Eve on Saturday, August 27, 2011 | 4:08 AM

 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டை உடைப்பதும் அந்த இடத்தில் ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியாது உடைத் தழிப்பதும் இன நல்லிணக்கத்துக்கு ஒரு போதும் உதவாது என்று வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இத்தகைய செயல்கள் தமிழ் மக்கள் மனதில் ஆறாத காயங் களையே ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு படையினரைக் குவித்து பெக்கோ பாரந்தூக்கிகள் மூலம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முற்றாக அகற்றப்பட்டுள்ளது. கட்டடச் சிதைவுகளை டிப்பர் வாக னங்கள் மூலம் அள்ளி சென்றனர். இது எங்கே கொண்டுசெல்லப்பட் டது என்பது தெரிய வில்லை. இது தேசிய நல்லினக்கத்துக்கு ஒரு போதும் உதவாது. தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத காயமே இத்த கைய செயல்கள் மூலம் ஏற் படும். மீண்டும் இனங்களும் ஒட்ட முடியாது நிலை மையை நோக்கி அரசு சென்று கொண்டிருக் கின்றது” என்றார்  சிவாஜிலிங் கம். வீட்டின் சிதைவுகளை எடுத்துச் சென்றவர்கள் அங்கு இருக்கும் எம் வல்வெட்டித்துறை மண்ணை என்னசெய் யப் போகிறார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger