Headlines News :

Meenakam News World

Home » , , , » ஊர்காவற்றுறையில் இளம்குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

ஊர்காவற்றுறையில் இளம்குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

Written By Eve on Saturday, August 27, 2011 | 7:14 AM

யாழ். ஊர்காவற்றுறை, நாரந்தனை பகுதியில் இளம் குடும்பஸதர் ஒருவர் அவரது மைத்துனரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.யாழ். குருநகர் தொடர்மாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவரும் நாரந்தனையில் வசித்து வந்தவருமான ஒரு பிள்ளையின் தந்தையான போல் றொபின்சன் (வயது 22) என்ற இளம்குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

படுகொலை குறித்து ஊர்காவற்றுறைக் காவற்றுறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சடலத்தைப் பார்வையிட்ட ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.   சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்  தலைமறைவாகியுள்ளார்.  காவற்றுறையினர் அவரைத் தேடி வலைவிரித்துள்ளனர்..

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger