Home »
அமைப்பின்
,
அவர்களுக்கான
,
இரங்கல்:
,
இளையோர்
,
தமிழ்
,
லேய்ட்டன்
» ஜாக் லேய்ட்டன் அவர்களுக்கான கனடா தமிழ் இளையோர் அமைப்பின் இரங்கல்:
ஜாக் லேய்ட்டன் அவர்களுக்கான கனடா தமிழ் இளையோர் அமைப்பின் இரங்கல்:
Written By Eve on Wednesday, August 24, 2011 | 9:39 AM
இன்று நாம் எமக்கு அனைத்து வகையிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த, கனடிய சமூகத்தில் ஒப்பிட முடியாத தலைவராக வாழ்ந்த ஒரு தலைசிறந்த மனிதரின் இழப்பினால் தாங்கொணாத் துயருக்குள்ளாகியுள்ளோம்.கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவராகிய திரு. ஜாக் லேய்ட்டன் அவர்கள் (1950-2011) நேற்று அதிகாலை 4:45 மணிக்கு எம் அனைவரையும் ஆறாத்துயரில் ஆழ்த்தி இயற்கை எய்தினார். துயருறும் அவரது குடும்பத்தினருக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பாகிய நாம் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், இவரது ஈடுசெய்ய முடியாத இழப்பால் வருந்தும் ஏனையவர்களுடனும் நாமும் எமது துன்பத்தைப் பகிர்ந்துகொள்கின்றோம்.மனிதஉரிகைகளுக்காக ஓங்கிக் குரல்கொடுக்க வல்லவரான ஜாக் லேய்ட்டன் அவர்கள், இக்கட்டான 2009ஆம் ஆண்டின் காலகட்டத்தில் கனடியத் தமிழர்களாகிய எம்முடன் தோளோடுதோள் நின்ற ஒரேயொரு மத்திய அரசியல் கட்சித் தலைவராவார். தமிழ் மக்களுடன் இணைந்து சிறிலங்கா அரசின் தமிழர் விரோதப் போக்கினை எதிர்த்து என்றும் குரல்கொடுத்துவந்த இவர் என்றும் கனடியத் தமிழர்களின் மனங்களை விட்டு அகலாதிருப்பார்.“இளையோர்களாகிய உங்களில் நான் நம்பிக்கை வைக்கிறேன். உங்கள் சக்தி, உங்கள் நோக்கு, நீதிக்கான உங்கள் வேட்கை ஆகியவையே இன்று எமது நாட்டுக்கு தேவையாக உள்ளவை. எமது பொருளாதாரம், அரசியல், நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமான திட்டமிடல் போன்றவற்றின் மையமாக நீங்கள்தான் திகழ வேண்டும்� என தன் இறப்புக்கு சில நாட்களின் முன் அவரால் எழுதப்பட்ட கடிதத்தில் இளையோர் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் மேற்படி பதத்தினை கனடாவில் துடிப்புடன் செயற்படும் இளையோர் அமைப்புகளில் ஒன்றான கனடா தமிழர் அமைப்பு நினைவுகூர்வதுடன், இளையோர் மீதான அவரது நம்பிக்கையையும் என்றும் மனதிற்கொண்டு செயலாற்றும்.உலகெங்குங்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனப் பாடுபட்ட அவரது எண்ணம் நிறைவேற நாம் அனைவரும் நம்பிக்கையுடன் குரல்கொடுத்தால் நிச்சயமாக எம்மால் அவர் ஆவலை நிறைவேற்ற முடியும்.ஜாக் லேய்ட்டன் அவர்கள் அமைதியில் இளைப்பாறுவாராக.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment