Headlines News :

Meenakam News World

Home » , , , , » சிறிலங்காவின் அறிக்கை தனது குற்றத்தை மறைக்கும் ஓர் முயற்சி

சிறிலங்காவின் அறிக்கை தனது குற்றத்தை மறைக்கும் ஓர் முயற்சி

Written By Eve on Tuesday, August 2, 2011 | 9:43 AM

அரசாங்கம் நேற்று ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. போர் தொடர்பான தனது வெள்ளை அறிக்கை என கூருகின்றது. இந்த அறிக்கை மூலம் அரசாங்கம் தனது குற்றங்களை மூடி மறைக்க முற்படுகின்றது.

கடந்த இருவருடமாக  பூச்சிய இழப்பு நடவடிக்கை என கூறி வந்த அரசாங்கம் இப்போது முதற்தடவையாக பொதுமக்கள் கொல்லப்பட்டதனை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் கொல்லப்பட்டமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

போரில் கனரக ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள், தொண்டு நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களிற்கான ஆதாரங்க இருக்கின்றன. ஆனால் அதற்கான பதில் அரசின் அறிக்கையில் இல்லை.

விடுதலைப்புலிகளின் குற்றங்களை முழுமையாக கூறும் அரசாங்கம் தான் வன்னியில் என்ன செய்தார்கள், பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு தனது படைகளும் எவ்வகையில் காரணமாக இருந்தார்கள் என கூற மறுத்துள்ளது.

அடுத்ததாக சரண்டைந்த விடுதலைப்புலிகள் மீதான நடவடிக்கைகள், கொலைகள், சித்திரவதைகள் பற்றி எதனையும் காணோம். தனது படைகள் ஆளில்லா விமானமூலம் தெளிவாக படம் பிடித்தே சண்டை செய்துள்லார்கள் எனவும் விடுதலைப்புலிகள்தான் கனரக ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என கூறும் படையினர். அத்தகைய நுட்பத்தினை பயன்படுத்தி பொதுமக்கள் மீதும் ஆஸ்பத்திரிகள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதனை தடுத்திருக்கலாம் அல்லவா?

பேருக்கு தனது படைகள் செய்த குற்றங்கள் என சில வழக்குகலை காட்டியுள்ள அரசாங்கம் , கைக்கணக்கிற்கு சில எண்ணிக்கையான குற்றங்கள் தமது படையினர் செய்துள்ளதாகவும் அவை விசாரிக்கபட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அதன் விபரங்களையோ அல்லது எங்கு நடந்தது என்பது பற்றியோ குறிப்பிடவில்லை.

ஆகவே சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் இந்த அறிக்கையினை ஏற்ககூடியது அல்ல மாறாக ஐக்கிய நாடுகளால் தயாரிக்கப்பட்ட  அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச விசாரணை ஒன்றையே எமது அமைப்பு வலியுறுத்துகின்றது என மனித உரிமை கண்காணிப்பக அறிக்கையில் கூறபப்ட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger