Headlines News :

Meenakam News World

Home » , , , , , » மன்னார் கடற்கரையில் இந்திய மீனவரின் சடலம் மீட்பு

மன்னார் கடற்கரையில் இந்திய மீனவரின் சடலம் மீட்பு

Written By Eve on Tuesday, August 2, 2011 | 9:42 AM

மன்னார், சௌத்பார் கடற்கரையில் இன்று செவ்வாய்க்கிமை கரை ஒதுங்கிய இந்திய மீனவர் ஒருவருடைய சடலத்தினை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.சௌத்பார் கடற்கரைக்கு தொழிலுக்கு சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தினை கண்டு கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் கடற்படையினாரல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்தே பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்

சுமார் 45 வயது மதிக்கத்தக்க மீனவர் ஒருவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்பட்டது.

மன்னார் நீதவான் கே.ஜீவரானியின் உத்தரவிற்கமைய சடலம் சோதனையிடப்பட்ட போது குறித்த நபர் அணிந்திருந்த உடையின் பொக்கற்றில் இருந்து இந்திய நாணயம், இந்திய தீப்பெட்டி என்பன மீட்கப்பட்டன.

சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger