Headlines News :

Meenakam News World

Home » , , , , , » காணிகளை எழுதி தருமாறு வற்புறுத்தும் சிங்கள இராணுவம்

காணிகளை எழுதி தருமாறு வற்புறுத்தும் சிங்கள இராணுவம்

Written By Eve on Thursday, August 25, 2011 | 10:31 PM

காணிகளை தமக்கு எழுதித்தருமாறு சிங்களப்படையினர் வடமராட்சி கிழக்கு கரையோர கிராமங்களில் வதியும் பொதுமக்களை வற்புறுத்தி வருகின்றனர்.இவ்வாறு வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம்; வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தாம் ஆராய்ந்ததாக வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

சட்டரீதியாக காணிகளை பெற்றபின் தென்னிலங்கையிலிருந்து சிங்கள மீனவர்களை கொண்டு வந்து குடியேற்றுவதற்கும் இராணுவம் முற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

செம்பியன்பற்றிலிருந்து சுண்டிக்குளம் வரைக்குமான கரையோர காணிகளை இராணுவம் பொதுமக்களிடமிருந்து வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் ஆழியவளை, வத்தியராயன் ஆகிய கிராமங்களில் கடற்கரை ஓரமாக இருக்கும் காணி உரிமையாளர்களை அழைத்த இராணுவ முகாம் பொறுப்பதிகாரிகள் முதலில் அனைவரின் காணி உறுதிகளை வாங்கியதாகவும் தற்போது அக்காணிகளை தமக்கு எழுதி தருமாறு வற்புறுத்தி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இப்பகுதிகளில் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் நூற்றுக் கணக்கானவர்கள் கடலட்டை பிடித்து வருவதாகவும் இதனால் தமது மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு இராணுவம் சகல உதவிகளையும் செய்து வருவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் தமது கரைவலைத் தொழில் முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதாக அச்சங்கம் வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்திடம் முறைப்பாடு செய்துள்ளது

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger