பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் செப்டெம்பர் 7ம் திகதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என நேற்றைய தினம் தகவல்கள் பரவியதை அடுத்து சீமான் தலைமையிலான தமிழ் உணர்வாளர்கள் கலந்து ஆலோசித்து தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தக்கோரி மனுத்தாக்கல் செய்வது என தீர்மானத்தை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுவும் நிராகரிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம்மனுப் பரிசீலனையின் போது இந்தியாவின் பிரபல சட்டத்தரணிணை ராம்ஜெத்மலானியை மனுதாரர் சார்பில் நியமிக்க தமிழ் உணர்வாளர் தீர்மானித்துள்ளனர்.
No comments:
Post a Comment