Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » தமிழ் நாட்டின் முற்றுகையை எதிர்கொள்ள கடற்படை தயார்: சிறிலங்கா

தமிழ் நாட்டின் முற்றுகையை எதிர்கொள்ள கடற்படை தயார்: சிறிலங்கா

Written By Eve on Saturday, August 13, 2011 | 11:48 AM

தமிழக அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மீனவர்களால் எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கச்சைதீவு முற்றுகைப் போராட்டத்தினை எதிர்கொள்ள சிறிலங்கா கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சைதீவையும் அதன் அண்டிய பிரதேசத்தையும் சிறிலங்கா கடற்படை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தயாராகும் அதேவேளை, தேவைப்படும் பட்சத்தில் பலாலி விமான நிலையத்தின் ஊடாக சிறிலங்கா விமானப் படையை கச்சைதீவுப் பிரதேசத்துக்கு அனுப்பவும் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

முற்றுகைப் போராட்டத்தின் மூலம் கச்சைதீவுக்குள்; உள்நுழைவதனைத் தடுக்கும் வகையிலான அனைத்து எற்பாடுகளுடனும் தயாராக இருக்குமாறு கடற்படை, விமானப்படை ஆகியனவற்றுக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger