Headlines News :

Meenakam News World

Home » , , , , , » யாழ் பிராந்தியத்தில் கொடுப்பனவுகளில் அநீதி -தாதியர் சங்கம் போர்க்கொடி‏

யாழ் பிராந்தியத்தில் கொடுப்பனவுகளில் அநீதி -தாதியர் சங்கம் போர்க்கொடி‏

Written By Eve on Thursday, August 4, 2011 | 9:22 PM

யாழ் பிராந்தியத்தில் கொடுப்பனவுகளில் அநீதி -தாதியர் சங்கம் போர்க்கொடி‏

ஊழல்களுக்கு பெயர்போன யாழ் பிராந்திய சுகாதார சேவைப்பணிமனையின் சம்பள கொடுப்பனவு நடைமுறைகளினால் விரக்தியுறும் நிலையில் பணியாளர் உள்ளனர் .

இவர்கள் தனித்த சர்வாதிகாரப்போக்கை கடைப்பிடிப்பதாகவும்
சம்பள கொடுப்பனவு தொடர்பான விபரங்களையும் உரிய ஆவணங்களையும் ஒவ்வொரு மாதமும் 5ம்  திகதிக்குமுன் அனுப்பத்தவறின் அம் மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று கடும் உத்தரவை பிறப்பித்து சில ஊழியர் வயிற்றில் அடித்ததை தொடர்ந்து தாதியர் சங்கம் இவ்வநீதியை தட்டிக்கேட்டுள்ளமை பாராட்டவேண்டிய விடயமாகும் .
சிங்கள அரசின் கைக்கூலியாக இயங்கி இனஒழிப்பின் கர்த்தாவாகவுள்ள யாழ் பிராந்திய பணிப்பாளர் தமிழினத்துக்கு கிடைத்த சாபக்கேடு என்றும் வேலணை மருத்துவ மாதின் கொலையில் கர்பப்பை மாற்றும் ஆதாரங்களை அகற்றும்படி உத்தரவிட்டு தமிழினத்தை எடுப்பார் கைப்பிள்ளை எந்த சிங்களவனும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை உருவாக்கிய அதிகாரி தமக்கு எந்த நிலையிலும் நல்லது செய்யப்போவதில்லை என்று தாதிய உத்தியோகத்தர் தமது மனம் திறந்த உண்மையை வெளிப்படுத்தினர் .
இதைவிட தனியார் வர்த்தக நிலையங்களில் பங்குடமைவியாபாரத்தையும் தனியார் கட்டட ஒப்பந்த வேலையையும் திறம்பட செய்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் மகாத்மாவை கடித்துக்குதறுமளவில் ஊழியர்கள் வெறுப்படைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger