Home »
சத்திரசிகிச்சை
,
சோனியாவிற்கு
,
நியூயோர்க்கில்
,
நோய்?
,
புற்று
» சோனியாவிற்கு புற்று நோய்? நியூயோர்க்கில் சத்திரசிகிச்சை
சோனியாவிற்கு புற்று நோய்? நியூயோர்க்கில் சத்திரசிகிச்சை
Written By Eve on Friday, August 5, 2011 | 10:42 AM
நியூயோர்க்கில் உள்ள விசேட மருத்துவமனை ஒன்றில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் திவிவேதி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.ஓகஸ்ட் 4 ஆம் திகதி இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் திவிவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சோனியா காந்திக்கு என்ன நோய் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அறிவிக்க காங்கிரஸ் மறுத்து வருகின்றது.ஆனால் அவருக்கு புற்று நோயாக இருக்கலாம் என நியூயோர்க் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கட்சியின் பொறுப்பு ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment