Headlines News :

Meenakam News World

Home » , , , , » மன்னாரில் இரு வருடங்களில் 784 மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்

மன்னாரில் இரு வருடங்களில் 784 மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகல்

Written By Eve on Friday, August 5, 2011 | 6:16 AM

மன்னார் மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாடசாலைகளிலிருந்து 784 சிறுவர்கள் இடைவிலகியுள்ளமை தொடர்பில் மன்னாரிலுள்ள நன்னடத்தைப் பிரிவு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மன்னார் மாவட்ட உளசமூக இணைப்பாளர் நிக்கலஸ் அன்ரனி லோறன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

16 வயது முதல் 18 வயது வரையான சிறுவர்களே  பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனாலும் இந்த வருடத்தில்  மன்னார் மாவட்டத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுவதாகவும் நிக்கலஸ் அவர்  குறிப்பிட்டார்.

இந்த சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகி நீண்டகாலமாகியுள்ளதால்; அவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்த்துக்கொள்ள முடியாதுள்ளது. இவ்வாறானவர்களுக்கு சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அல்லது தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் மன்னார் சிறுவர் தொடர்பாக பணியாற்றும் அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.

வறுமை, பெற்றோர்களின் கவனயீனம், கல்வி கற்பதில் நாட்டமின்மை போன்ற காரணங்களால் இந்த சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகியுள்ளதாகத் தெரியவருகின்றதெனவும் நிக்கலஸ் அன்ரனி லோறன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு மாதாந்தம் உதவித்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு  மாதாந்தம் தலா 750 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.  முதற்கட்டமாக கடந்த வாரம் இந்த உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அத்துடன், பாடசாலை செல்லும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள சிறுவர்களுக்கும் தாய் அல்லது தந்தையை இழந்த பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் கூடிய விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் நிக்கலஸ் அன்ரனி லோறன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger