Home »
அனுமதி?
,
திருமலை
,
தென்னைமரவாடி
,
மக்களுக்கு
,
மீள்குடியேற
,
வருடங்களின்
» திருமலை தென்னைமரவாடி மக்களுக்கு 29 வருடங்களின் பின் மீள்குடியேற அனுமதி?
திருமலை தென்னைமரவாடி மக்களுக்கு 29 வருடங்களின் பின் மீள்குடியேற அனுமதி?
Written By Eve on Saturday, August 6, 2011 | 8:38 AM
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட எல்லைக் கிராமமான தென்னைமரவாடி கிராம மக்களை மீளக் குடியமர்த்தும் பூர்வாங்க பணிகளை கிழக்கு மாகாண முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யுத்த சூழல் காரணமாக 1982ஆம் ஆண்டு இந்த கிராமத்தை சேர்ந்த 450ற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வடபகுதி இடம்பெயர் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இந்த மக்கள் மீள் குடியேறுவதற்கான அனுமதியினை பாதுாப்புத் தரப்பினர் இன்று வழங்கியுள்ளதாக கிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மீள் குடியேறுவதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தென்னைமரவாடி கிராமத்திலிருந்து தனது 22ஆவது வயதில் இடம்பெயர்ந்து திருமலையில் வசிக்கும் ஒருவருடன் இது தொடர்பாக கேட்டபோது, தமக்கு இதுபற்றி தெரியாது எனவும், அப்படி அனுமதித்தால் தான் மிகவும் சந்தோசமடைவேன் என்று உணர்ச்சிவசப்பட தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 22 வயதில் எனது பிறந்த மண்ணை விட்டு வெளியேறி, 29 வருடங்கள் முடிவடைந்துள்ளதை நினைக்கும் போது மிகவும் சஞ்சலமாக இருக்கிறது என அழுதபடி தெரிவித்தார் அந்த தென்னைமரவாடி குடிமகன்.
Labels:
அனுமதி?,
திருமலை,
தென்னைமரவாடி,
மக்களுக்கு,
மீள்குடியேற,
வருடங்களின்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment