Home »
(Photo
,
கொடியேற்றம்
,
சனிக்கிழமை
,
தேவாலய
,
நடைபெற்றது
,
நேற்றயதினம்
,
மன்னார்
» நேற்றயதினம் சனிக்கிழமை மன்னார் மடு தேவாலய கொடியேற்றம் நடைபெற்றது (Photo in)
நேற்றயதினம் சனிக்கிழமை மன்னார் மடு தேவாலய கொடியேற்றம் நடைபெற்றது (Photo in)
Written By Eve on Saturday, August 6, 2011 | 10:36 PM
மன்னார் மடு தேவாலயத்தின் ஓகஸ்ட் மாதத் திருவிழா நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஆதனைத்தொடர்ந்து ஆசிர்வாத பெருவிழா இடம் பெற்றது. இதன் போது சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் வரை கலந்து கொண்டிருந்தனர்.இம் முறை சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கமைவாக குடி நீர்,மலசல கூடம்,சுகாதாரம்,போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பெருந்திரலான மக்கள் மடுத்திருத்தளத்திற்கு வந்து தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளமையினால் எதிர்வரும் தினங்களில் வரும் பக்தர்களுக்கு தங்குமிட பற்றாக்குறை ஏற்பட சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.தற்போது மடுத்திருத்தளத்தில் மின் சாரப்பிரச்சினை ஏற்பட்டு வருவதாகவும் இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை 8 ஆம் திகதி திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்டமொன்று இடம் பெறவுள்ளது.நேற்று சனிக்கிமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மடுத்திருவிழா தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி திருவிழா இடம் பெறும் என மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை மேலும் தெரிவித்தார்.




Labels:
(Photo,
கொடியேற்றம்,
சனிக்கிழமை,
தேவாலய,
நடைபெற்றது,
நேற்றயதினம்,
மன்னார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment