Headlines News :

Meenakam News World

Home » , , , , , » வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது- இலங்கைக்கு நெருக்கடி(17 Photo in).

வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது- இலங்கைக்கு நெருக்கடி(17 Photo in).

Written By Eve on Wednesday, August 10, 2011 | 11:19 PM

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஜெனீவாவில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிபியா மற்றும் சோமாலியாவில் இடம்பெற்று வரும் மோதல்களின்போதும் வைத்தியசாலைகள், சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் இலக்கு வைக்கப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை மேற்கோள்காட்டி ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

“இலங்கை மற்றும் சோமாலியாவில் வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. லிபியாவில் அம்பிலூன்ஸ்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது”. என சர்வதேச மன்னிப்புச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Yves Daccord இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப் சபையானது 16 நாடுகளுக்கு தமது சேவையாளர்களை அனுப்பியிருந்ததாகவும் பல இடங்களில் சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக ஈராக், இலங்கை மற்றும் சோமாலியாவில் தமது பணியாளர்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்பட்டதென சர்வதேச மன்னிப் சபை விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger