Headlines News :

Meenakam News World

Home » , , , , , » குமார் சங்கக்காரவின் சொற்பொழிவிற்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டு

குமார் சங்கக்காரவின் சொற்பொழிவிற்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டு

Written By Eve on Monday, July 11, 2011 | 2:11 AM

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அண்மையில் பிரிட்டனில் ஆற்றிய சொற்பொழிவிற்கு, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாராட்டு வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கப் படையினர் நடத்திய போராட்டத்தை குமார் சங்கக்கார பாராட்டியுள்ளதாக, கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போர் வெற்றி குறித்தோ அல்லது படைவீரர்கள் குறித்தோ சர்வதேச அரங்களில் எந்தவொரு விளையாட்டு வீரரும் சொற்பொழிவாற்றியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குமார் சங்கக்கார படைவீரர்களின் ஆற்றலை பாராட்டி சொற்பொழிவு ஆற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

2011 கொலின் கொட்ரி நினைவு சொற்பொழிவில் குமார் சங்கக்கார அண்மையில் உரையாற்றினார்.

இலங்கை கிரிக்கட் துறையில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பிலும் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கருத்துக்கள் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சங்கக்காரவின் உரை தொடர்பில் கவனம் செலுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger