Headlines News :

Meenakam News World

Home » , , , , , » கிழக்கில் சட்டவிரோத ஆயுதங்கள் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை – பொலிஸார்

கிழக்கில் சட்டவிரோத ஆயுதங்கள் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை – பொலிஸார்

Written By Eve on Monday, July 11, 2011 | 2:10 AM

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்கள் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை பயன்படுத்துவோர் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள போதிலும், இதுவரையில் ஆயுதங்கள் ஒப்படைக்கப்படவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆயுதங்களை ஒப்படைக்க வருவோர் பழைய குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்படுவர் என்ற அச்சம் காரணமாக, பலர் ஆயுதங்களை ஒப்படைக்க அஞ்சுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதங்களை ஒப்படைக்கச் செல்லும் நபர்களை கைது செய்யும் உத்தேசம் கிடையாது என பொலிஸாரும், இராணுவத்தினரும் அறிவித்துள்ளனர்.

சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

உரிய நேரத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger