திருநெல்வேலி தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கை இராணுவத்தினர் மீது 1983ம் ஆண்டு ஜூலை 23ம் நாளன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நிகழ்வைக் குறிக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதெனலாம். இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டார்.
தாக்குதல் பற்றிய முழுமையான பதிவு
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறில் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான படையினர் கொல்லப்பட்டது இத்தாக்குதல் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதலணித் தளபதி லெப்டினன்ட் சீலன், ஆனந்த் ஆகியோர் இறந்த 8 ஆம் நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இலங்கை இராணுவம் தனக்கு சிம்ம சொப்பனமாக இருந்து லெப்டினன்ட் சீலன் கொல்லப்பட்ட தாக்குதலை ஒரு பெரும் படை நடவடிக்கையாகவே மேற்கொண்டது. அப்போது யாழ். படைத் தலைமையகமாக இயங்கிய குருநகர் இராணுவ முகாமில் வைத்து அப்போதைய யாழ். சிறிலங்கா படைத் தளபதி பிரிகேடியர் பல்தசார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் அடுத்த தாக்குதல் இலக்கு குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டது.
இதன்படி பலாலிப் பகுதியில் இருந்து ஒரு இராணுவ அணியும் குருநகரில் இருந்து ஒரு இராணுவ அணியும் நகர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவது அவர்களின் திட்டம். பலாலியில் இருந்து நகரும் அணிக்கு ‘போர்போர்பிராவோ’ என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது.
குருநகர் அணிக்கு ‘போர்போர்சாளி’ என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. இதில் ‘போர்போர் பிராவோ’ அணி வாகனத்தில் வந்தபோது விடுதலைப் புலிகள் திருநெல்வேலி-பலாலி வீதியிலுள்ள தபால் பெட்டிச் சந்தியில் வைத்து கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலை நடத்தினர். இதில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் வே. பிரபாகரன், லெப். கேர்ணல் கிட்டு, லெப். கேர்ணல் விக்டர், லெப். கேர்ணல் பொன்னம்மான், லெப் கேர்ணல் அப்பையா அண்ணை, மேஜர் கணேஸ் உட்பட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment