Headlines News :

Meenakam News World

Home » , , , , , » உள்ளூராட்சி சபைகளின் திட்ட நிதிகளை வாபஸ்பெறும் சிங்களம்

உள்ளூராட்சி சபைகளின் திட்ட நிதிகளை வாபஸ்பெறும் சிங்களம்

Written By Eve on Friday, July 29, 2011 | 8:27 AM

தேர்தலிற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு உள்ளூராட்சி சபைக்கான அபிவிருத்தி திட்ட நிதிகள் , திட்டங்கள் வாபஸ்பெறப்படுகின்றன. தொழில் நுட்பகாரணங்கள், திட்டத்தில் வழுக்களை கண்டு பிடித்து இந்த பழிவாங்கல்களை அரசாங்கம் செய்கின்றது.

இதே வேளை கிளி நொச்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கும் இனித்தான் நிதி பெற வேண்டும் எனவும் அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து  நிதி கோரபப்டும் எனவும் கூறியுள்ளது சிங்கள அரசு.

ஏற்கனவே வடக்கு கிழக்கில் பல்வேறு அபைவிருத்திப்பணிகளுக்கு என பெருவாரியான நிதிகளை பெற்ற அரசாங்கம் கட்டடங்களுக்கு வெள்ளையடித்ததை தவிர வேறு எதுவும் செய்யப்படவில்லை.

பொறியியலாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் மாற்றம்
இதே வேளை வினைத்திறன் உடைய ஆளணியினரை வேறு இடங்களுக்கு மாற்றுவதன் ஊடாக திட்டங்களை நடமுறைப்படுத்துவதனை இழுத்தடிக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது அரசாங்கம். எடுத்துக்காட்டாக குறித்த விடய பொறியியலாளர் அல்லது தொழில் நுட்ப அலுவலரின் சாத்தியக்கூற்று அறிக்கை இன்றி திட்டங்களை தொடரமுடியாது அல்லது பணத்தினை விடுவிக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் தேர்தல் பழிவாங்கல்களே என கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger