இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை உலகத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் சேதுராமன் உட்பட முக்கிய தமிழ் ஆர்வலர்கள் கடந்த புதன்கிழமை (27ம் திகதி) சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.மன்மோகன் சிங்கின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் இடம்பெற்றதோடு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கைப் பிரச்சினை, ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்புக்கு வரும் போது, தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா நிற்க வேண்டும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து செய்ய வேண்டும். 13வது சட்டத்திருத்தம் அளிக்கும் அனைத்து உரிமைகளையும் இலங்கை தமிழர்களுக்கு பெற்றுத்தர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட சில முக்கிய தமிழ் ஆர்வலர்கள் மனுவையும் கொடுத்துள்ளார்கள்.இலங்கையில் தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். தங்களது பிரதிநிதிகளாக இவர்களைத் தான் தமிழ் மக்கள் அங்கீகரித்துள்ளனர். எனவே, 13வது சட்டத்திருத்தத்தின் படி தமிழர்களுக்கு உள்ள உரிமையை பெற்றுத்தர இந்தியா, முழு மூச்சாக பாடுபட வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.13 ஆவது சட்டதிருத்தத்தில், தமிழர்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ அவற்றையெல்லாம் தர வேண்டும் என இலங்கை அரசிடம் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் இந்தியா எடுத்துக் கூறிவருவதாக மனுவை ஏற்றுக் கொண்ட மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
Viewer Comments
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment