Headlines News :

Meenakam News World

Home » , , , » வன்னியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

வன்னியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

Written By Eve on Saturday, July 16, 2011 | 3:59 AM

வடக்கில்  கொக்காவில், வன்னிவிளாங்குளம், உடையார்கட்டுகுளம் பகுதிகளிலிருந்து பெருந்தொகையான ஆட்லறிகளையும் வெடிப்பொருட்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

120 மி.மி. மோட்டார் குண்டுகள் 1555,  12.7 மி.மீ துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 27,000 தோட்டாக்கள், 7.52 மி.மீ துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 15,000 ஆகியனவும் இவற்றில் அடங்கும்.

நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதலின்போது, 81 மி.மீ ரக மோட்டார் குண்டுகள் 54, 86 பௌண்டர் குண்டுகள் 3000, 130 மி.மீ ஏவுகருவிகள்,  ஆகியன கைப்பற்றப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல கூறினார்.

வெடிபொருட்கள் அற்ற 250 கிலோகிராம் விமான குண்டுகள் 4, 250, வெடிபொருட்களுடன்கூடிய 250 கிலோகிராம விமான குண்டுகள் 6, எம்.பி.எம்.ஜி துப்பாக்கிகளுக்கான 2000 சுற்று தோட்டாக்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger