இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் கடந்த மூன்று தினங்களாக ஒளிபரப்பப்பட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்துடன் இணைந்து நடத்தப்பட்ட விவாதத்தில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல கலந்துகொண்டமை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இவ்விவாதத்தில் மேஜர் ஜெனரல் உபய மெதவெல கலந்துகொண்டதின் மூலம் இந்நிகழ்ச்சி பக்கச்சார்பற்றது என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இவ்விவாதத்தில் கலந்துகொள்ள இவரை அனுமதித்தமை மிகப்பெரிய தவறு என்றும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்விவாதத்தில் மேஜர் ஜெனரல் உபய மெதவெல கலந்துகொண்டு பதிலளிக்க வேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் அழுத்தம் கொடுத்திருந்த நிலையில், இம்முடிபு குறித்து கோத்தபாய ராஜபக்ஷ கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இராணுவப் பேச்சாளர் அதிகாரி மேஜர் ஜெனரல் உபய மெதவெலவை இவ்விவாதத்தில் பங்கேற்க வைப்பதற்காக ஜனாதிபதி ஊடாக வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கை படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் இக்குற்றச்சாட்டுகளால் வெளிவிவகார அமைச்சுக்கும் படைத்துறை அமைச்சுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment