குறித்த பிக்கு வர்த்தக நிலையங்களுக்கு செல்வதற்காக NC YI 9029 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியைப் பயன்படுத்துகின்றார்.
வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பிக்கு உரிமையாளர்களிடம் முதலில் சாதுவாக பேசி தம்மை அறிமுகப்படுத்தி விட்டு, பின்னர் கடும் தொனியில் பணம் சேகரிப்பதற்காக பொலிஸாரிடம் அனுமதி பெற்றிருக்கிறேன். ஆயிரம் ரூபா தரவேண்டும் என மரட்டும் பாவனையில் கூறி பணத்தை சேகரித்து வருகின்றார்.
பணம் பெற்ற பின்னர் தனிச்சிங்களத்தில் உள்ள பற்றுச்சீட்டை வழங்குகின்றார்.
அதில்"அனுராதபுரம் ஸ்ரீசம்போதி விகாரை அதன் கீழ் இயங்கும் சிறுவர் இல்லத்திற்கான பண சேகரிப்புக்காக " எனறு உள்ளதுடன் அதன் பின்னால் "அனுராதபுரம் ஸ்ரீசம்போதி விகாரை விகாராதிபதி ஹேமரத்ன இன் உத்தியோகபூர்வ முத்திரையும் தொலைபேசி இலக்கமும் உள்ளது.
No comments:
Post a Comment