Headlines News :

Meenakam News World

Home » , , , , , » வவுனியா கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது

வவுனியா கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது

Written By Eve on Monday, July 18, 2011 | 10:03 PM

மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் அவர்களின் உறுதிமொழியை அடுத்து வவுனியா சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் இன்று (18.07.2011) பி.பகல் 1 மணியளவில் முடிவுக்கு வந்தது.

மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் அவர்களின் உறுதிமொழியை அடுத்து வவுனியா சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

கடந்த 11.07.2011 ஆம் திகதி தொடக்கம் வவுனியா சிறைச்சாலையில் உள்ள 4 தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர் பின்பு இவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த சிறைச்சாலையில் உள்ள 40 தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

கைதிகளின் ஒரு வாரகால உண்ணாவிரத போராட்டத்தினால் அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டது.

இதே நேரம் இன்று பி.பகல் 1 மணிக்கு குறித்த சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் டி.ஆர்.டி சில்வா மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆகியோர் உண்ணாவிரதமிருந்துவரும் கைதிகளுடன் பல மணிநேரமாக கலந்துரையாடி 10 நாட்களுக்குள் ஒரு தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்ததாகவும் ஆரம்பத்தில் இந்த உறுதி மொழிகளை ஏற்க மறுத்த கைதிகள் 10 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் எதிர்வரும் 29 ஆம் திகதி தங்களின் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதாகவும் கூறி தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

கடந்த 15.10.2010 இல் உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு 3 மாதகாலத்திற்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக அவர்களுக்கு வாக்குறுதி அழித்து அவர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெருமை இந்த ஆயருக்கே சேரும் ஆனால் அந்த வாக்குறுதிகள் இன்னுமே நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger