Headlines News :

Meenakam News World

Home » , , » கூட்டுப்படைத்தளபதியின் மரக்கடத்தல் பிடிபட்டது.

கூட்டுப்படைத்தளபதியின் மரக்கடத்தல் பிடிபட்டது.

Written By Eve on Sunday, July 31, 2011 | 9:22 PM

முன்னாள் விமானப்படைத் தளபதியும் தற்போதைய முப்படைகளின் பிரதானியுமான ரொஷான் குணதிலக மரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேசத்திலிருந்து தேக்கை மரம் உட்படப் பெருந்தொகையான விலை மதிப்புமிக்க மரங்களைக் கொழும்புக்குக் கொண்டு வரும் போதே அவை கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

.கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் ரொஷான் குணதிலகவின் பாரிய மாளிகை ஒன்றுக்குத் தேவையான விலை மதிப்புமிக்க பெருந்தொகையான மரங்களை அனுமதிப்; பத்திரமின்றிச் சட்டவிரோதமாக கொழும்புக்குக் கொண்டு வரும்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் இவர் மரங்களைக் கடத்தி வந்திருப்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger