அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் கப்பிற்றல் விசிற்றர் நிலையத்தில் இன்று சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் காண்பிக்கப்படவுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜிம் மக் கொவென் இந்த ஆவணப்படத்தை திரையிடும் நிகழ்வில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு அறிமுகவுரை நிகழ்த்தவுள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் காண்பிக்கப்படவுள்ள சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை அடுத்து சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இந்த ஆவணப்படம் கடந்த மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது முதன்முறையாக காண்பிக்கப்பட்டது.
பின்னர் அது நியுயோர்க்கில் ஐ.நா தலைமையக வளாகத்திலும் காண்பிக்கப்பட்டது.
சனல் -4 தொலைக்காட்சி கடந்த மாதம் 14ம் நாள் ஒளிபரப்பிய இந்த ஆவணப்படத்தை அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியும் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியும் மறு ஒளிபரப்புச் செய்துள்ளன.
உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ஆவணப்படத்தை வொசிங்டனில் உள்ள அமெரிக்க காங்கிரசின் கப்பிற்றல் விசிற்றர் நிலையத்தில் இன்று திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளின் ஏற்பாட்டிலேயே இந்த ஆவணப்படம் அமெரிக்க காங்கிரசில் காண்பிக்கப்படவுள்ளது.
இதன்டையே, இது சிறிலங்கா அரசுக்கு எதிரான சதி என்றும், அதற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் மைக் கெவென் முன்னிலை வகிப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கத்தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் உலகெங்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த ஆவணப்படத்தை திரையிடுவதைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Home »
‘சிறிலங்காவின்
,
அமெரிக்க
,
காங்கிரசில்
,
கொலைக்களங்கள்‘
» அமெரிக்க காங்கிரசில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘
அமெரிக்க காங்கிரசில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘
Written By Eve on Thursday, July 14, 2011 | 10:50 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment