Headlines News :

Meenakam News World

Home » , , , » காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்..

காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்..

Written By Eve on Tuesday, July 12, 2011 | 7:17 AM

காத்தான்குடி சித்தீகியா மாணவர் விடுதியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் காரணமாக நேற்று திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மாணவர் விடுதிக்கு இரவு உணவு திருமண வீடொன்றிலிருந்து வந்துள்ளது. இவ் உணவை உட்கொண்ட மாணவிகளில் முப்பத்தைந்து பேர் மில்லத் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் ஜாமியதுஸ் சித்தீகியா மகளிர் அரபுக் கல்லூரியைச் சேர்ந்தவர்களாவர்.

நேற்றுக்காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுளைவு ஏற்பட்டதால் காத்தான்குடி வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விடுதியில் காத்தான்குடி மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளும் தங்கியுள்ளனர். வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் நசீர்தீன் மற்றும் டாக்டர் அம்ஜத்ஹசன் ஆகியோர் அடங்கிய குழு இவர்களை பரிசோதித்து உடனடியாக சிகிச்சை வழங்கியது.

எவருக்கும் ஆபத்தான நிலையில்லையெனவும் குணமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் மாணவிகள் உட்கொண்ட உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger