பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இயக்குவதற்கான தனது தனிப்பட்ட நோக்கம் மற்றும் இலங்கையை இப்போது ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது தொடர்பாக அந்த ஆவணப்படத்தின் பணிப்பாளர் கெலும் மக்ரே விபரித்துள்ளார்.
"த டிப்ளோமற்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்த ஆவணப்படம் தொடர்பாகவும் அதனைச் சூழ்ந்துள்ள சர்ச்சை குறித்தும் அவர் விபரித்திருக்கிறார்.
கடந்த மே மாதம் ஐ,நா. நிபுணர் குழுவானது இலங்கை யுத்தத்தின் இறுதி வாரங்களின்போதான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமாறு பரிந்துரை மேற்கொண்டிருந்தது. நம்பகரமான குற்றச்சாட்டுகள் இருப்பதாக நிபுணர்குழு கூறியிருந்தது.
அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவை பாரியளவிலான பாரதூரமான சர்வதேச மனிதாபிமான மனித உரிமைகள் சட்டமீறல்களாக அமையுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இந்த மீறல்களை இழைத்திருப்பதாக நிபுணர்குழு கூறியிருந்தது.
கடந்த மாதம் பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சி நிலையம் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது. போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் கொண்ட பிரதிமைகளை இந்த ஆவணப்படம் உள்ளடக்கியிருந்தது.
இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கம் குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அலுவலக அமைச்சர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கு எதிரான அரசியல் நிகழ்ச்சி நிரலினால் இந்த ஆவணப்படம் வழிநடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.
டிப்ளோமற்றின் ஸ்ரிவார்ட் வார்ட்டர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குநர் கலூம் மக்ரேயுடன் இந்தச் சர்ச்சையை அவர் எதிர்கொண்ட விடயம் குறித்தும் கதைத்துள்ளார். அவை கேள்வி,பதிலாக இங்கு தரப்படுகின்றது.
* இந்தப் படத்தை இயக்குவதற்கான தங்களின் தனிப்பட்ட நோக்கம் என்ன? ஏன் இலங்கை இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டது?
கடந்த இரு வருடங்களாக இந்த விடயங்கள் தொடர்பாக சனல்4 செய்திகளை முழுமையாக வெளியிட்டு வருகின்றது. அவை யாவற்றையும் உள்ளடக்கியதாக இலங்கையின் கொலைக்களங்கள் காணப்படுகிறது.
நிபுணர் குழுவின் அறிக்கையின் பின்னர் இந்த வெளியீடு வந்தாலும் கூட அவை ஒரே நேரத்தில் இடம்பெற்ற விடயமாகவுள்ளன. இவற்றை நாங்கள் சமகாலத்தில் தெளிவான முறையில் ஆய்வு செய்துகொண்டிருந்தோம்.
எவ்வாறாயினும் நாங்கள் இருசாராரும் அடையாளம் காணக்கூடிய விதத்தில் தீர்மானத்துக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதென நான் நினைக்கின்றேன். ஆவணப்படத்துக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்த முறைப்பாடுகளிலொன்று இதனுடன் நேரடியாக தொடர்புபட்டிருப்பது சுவாரஸ்யமானதாகும்.
இந்த அபிவிருத்தியடைந்த நாட்டுக்கு எதிரான மேற்குலகின் அந்நியப்பட்ட நிகழ்ச்சி நிரலை ஒத்த தன்மையாக இது காணப்படுகிறதென இலங்கையில் இது பற்றி தெரிவிக்கப்படுகிறது. நீதி விசாரணைக்குப் புறம்பான தண்டனைகள் மற்றும் சித்திரவதை தொடர்பாக சில ஆவணப்படங்களை நான் இயக்கினேன் என்பதே யதார்த்தமாகவுள்ளது.
ஈராக்கில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கையாளும் இரு பாரிய ஆவணப்படங்களை நான் தயாரித்திருந்தேன் என்பது இங்குள்ள விடயமாகும். ஆதலால் மேற்குலக நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக இந்த ஆவணப்படம் தயாரிக்கும் திட்டம் காணப்பட்டதாக கூறப்படுவது தவறானதாகும்.
உண்மைகள் தொடர்பாக விசாரணை செய்வதே எனது பணியாகவுள்ளது. என்ன நடந்தது என்ற உண்மையைப் பெற்றுக்கொண்டு அதனை செய்தியாகக் கூறுவதே எனது பணியாகும். இலங்கை அரசாங்கமோ அல்லது தமிழ்ப் புலிகளோ அல்லது ஐக்கிய இராச்சியமோ இந்தக் குற்றங்களை மேற்கொண்டிருந்தார்களோ, இல்லையோ உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பெற்றுக்கொண்டு விசாரணை செய்வதே எனது பணியாகும்.
* படத்தில் முக்கியமான விடயமாக இருப்பது படையினர்,புலிகள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய கையடக்கத் தொலைபேசி பிரதிமையாகும். மோதலின் இறுதிநாட்களின்போதான ஆவணத்தை பார்க்கக்கூடியதாகவிருப்பதன் முக்கியத்துவம் என்ன?
இந்த யுத்தத்தின் இடரான நிலைமை என்னவென்றால் மோதலின் இறுதிப்பகுதி தொடர்பாக அறிக்கையிடுவதற்கோ அல்லது வெளிப்புற சாட்சியத்தைக் கொண்டிருப்பதற்கோ உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் இல்லாமற் கொண்டு சென்ற விடயமாகும்.
தமது பாதுகாப்புக்கு நீண்டகாலத்துக்கு உத்தரவு தர முடியாதென இலங்கை அரசாங்கம் தெரிவித்தபோது வெளியேற வேண்டிய நிலையேற்பட்டதாக ஐ.நா.வும் சர்வதேச அதிகாரிகளும் கூறியிருந்தன. சர்வதேச ஊடகங்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இலங்கை உள்நாட்டு ஊடகங்களைக் கொண்டிருக்கிறது. அவை மோசமான முறையில் நசுக்கப்பட்டிருந்தன. இலங்கையானது உலகில் நான்காவது மோசமான,ஆபத்தான இடத்தைக் கொண்ட நாடாக இருந்தது.
அரசாங்கத்தை எதிர்த்து விமர்சிப்போர்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலைமையேற்பட்டிருந்தது. அறியப்படாத சக்திகளினால் படுகொலை செய்யப்படுவது அல்லது பலவந்தமாக வெளியேறப்பட வேண்டிய நிலைமை ஊடகவியலாளருக்கு காணப்பட்டது.
ஆதலால் இந்த யுத்தம் இரகசியமான முறையில் இடம்பெற்றிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தத் தகவல் வெளிவருவதற்கு இரு வருடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன என்று மக்ரே கூறியுள்ளார்.
No comments:
Post a Comment