Headlines News :

Meenakam News World

Home » , , , , » சனல்4 தொலைக்காட்சி நிலையம் முன் சிங்களவர்கள் போராட்டம்

சனல்4 தொலைக்காட்சி நிலையம் முன் சிங்களவர்கள் போராட்டம்

Written By Eve on Sunday, July 17, 2011 | 10:45 PM

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து ஒளிபரப்பிய சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானியாவில் நேற்று சிங்களவர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

சனல்4 தொலைக்காட்சி நிலையம் முன்பாக கூடிய சிங்களவர்கள் சுமார் 4 மணி நேரம இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிலங்கா தேசியக்கொடிகளையும், சனல்4 தொலைக்காட்சிக்கு எதிரான மற்றும் ,சிறிலங்காவுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

சனல்4 தொலைக்காட்சி தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முனைவதாகவும், விடுதலைப் புலிகளுடன் உடன்பாடு வைத்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் சுமார் 3000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ள போதும் சில நூறு பேர் வரையே கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போராட்டத்தை லண்டனில் உள்ள சிறிலங்காவின் பதில் தூதுவர் அம்சாவே ஒழுங்கு செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger