Headlines News :

Meenakam News World

Home » , , , , » சனல்4 முன்பாக ஆர்ப்பாட்டம் நடாத்திய சிங்களவர்

சனல்4 முன்பாக ஆர்ப்பாட்டம் நடாத்திய சிங்களவர்

Written By Eve on Monday, July 18, 2011 | 10:34 AM

"இலங்கையின் கொலைக்களம்" என்ற பெயரில் இலங்கையின் இறுதிப் யுத்தம் குறித்த விவரணப் படம் ஒன்றை தயாரித்து வெளியிட்ட, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று லண்டனில் நடைபெற்றுள்ளது.சனல்-4 நிறுவனத்தினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் இறுதி யுத்தம் குறித்த விவரணப்படம், இலங்கையில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்று தாம் கருதுவதாகவும், அதனாலேயே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், அந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் சார்பில் பேசவல்லவராக தன்னைக் கூறிக்கொள்ளும் முஹமட் சஜிமுல்லா தெரிவித்தார்.



அந்தப் படத்தைப் பார்க்கும் இலங்கையின் இனங்கள், ஒன்று மற்றொன்றுக்கு எதிராக வன்செயலில் ஈடுபடலாம் என்று அவர் கூறினார்.

ஆகவே அத்தகைய வீடியோக்கள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படக்கூடாது என்றும், வேண்டுமானால், அப்படியான போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் போது அவை காண்பிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

சனல்4 தொலைக்காட்சி நிலையம் முன்பாக கூடிய சிங்களவர்கள் சுமார் 4 மணி நேரம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிலங்கா தேசியக்கொடிகளையும், சனல்4 தொலைக்காட்சிக்கு எதிரான மற்றும் சிறிலங்காவுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

சனல்4 தொலைக்காட்சி தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முனைவதாகவும், விடுதலைப் புலிகளுடன் உடன்பாடு வைத்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் சுமார் 3000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ள போதும் சில நூறு பேர் வரையே கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போராட்டத்தை லண்டனில் உள்ள சிறிலங்காவின் பதில் தூதுவர் அம்சாவே ஒழுங்கு செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger