Headlines News :

Meenakam News World

Home » , , , , , » சனல் 4 காணொளி சர்வதேச சதி பிரதி அமைச்சர் முரளிதரன் கண்டுபிடிப்பு

சனல் 4 காணொளி சர்வதேச சதி பிரதி அமைச்சர் முரளிதரன் கண்டுபிடிப்பு

Written By Eve on Sunday, July 17, 2011 | 3:50 AM

சனல் 4 காணொளித் தொகுப்பானது, இலங்கையின் அபிவிருத்தியை சகித்துக் கொள்ள முடியாத சிலரின் சூழ்ச்சியாகும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிபடைந்துள்ள நிலையில் நாட்டில் வடபகுதியில் அபிவிருத்திகள் இடம்பெற்று வருவதுடன் மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிபடைந்து அமைதியான சூழல் உருவாகின்ற நிலையில் சில தீய சக்திகள் இங்கே பிரச்சினைகளை உருவாக்க முற்படுகின்றன. இவை திட்டமிட்ட சதிகளாகவே இருக்கின்றது. இந்த திட்டங்களுக்கு ஏகாதிய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

தற்போதைய நிலையில் மக்கள் சமாதானமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள். அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்வடைந்து பொருளாதாரத்தில் அபிவிருத்தியை கண்டு வருகின்ற இந்த நிலையில் தீய சக்திகள் செயற்படுகின்றன.

சனல் 4 ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் காணொளிக் காட்சிகளைப் போன்று இலங்கை அரசாங்கமும் நினைத்தால் அதைவிட பயங்கரமான சாட்சிகளை கொண்ட காணொளிகள் வெளியிட முடியும். விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் தொகுத்து வெளியிட முடியும். ஆனால் இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்து சிங்கள மக்களின் உணர்வுகளை துண்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இந்த நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

 

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger