Headlines News :

Meenakam News World

Home » , , , , , , , » சனல்4 காணொளி தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது – ஐ.தே.க

சனல்4 காணொளி தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது – ஐ.தே.க

Written By Eve on Saturday, July 9, 2011 | 2:27 AM

சனல்4 காணொளி தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செனல்4 ஊடகம் இவ்வாறான ஓர் காணொளியை ஒளிபரப்புச் செய்ததாகவும், அப்போது அந்த ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுவரையில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை பொய்ப்பிப்பதற்கு பல்வேறு வழிகள் காணப்பட்ட போதிலும் அரசாங்கம் அந்த வழிகளை பின்பற்றத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger